| ஸ்லம்டாக் படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருது! | ![]() | ![]() | ![]() |
| Monday, 23 February 2009 08:10 |
லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 81-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.00 மணியளவில் தொடங்கியது. இதில், ஸ்லம்டாக் மில்லியனர் சிறந்த அடாப்டட் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை வென்றதாக அறிவிக்கப்பட்டு, அவ்விருது சைமன் பியூஃபாய்க்கு வழங்கப்பட்டது. இவ்விருதைப் பெற்று கொண்ட சைமன், "நான் இந்த விருதைப் பெறுவதற்கு நாவலாசிரியர் விகாஸ் மிக முக்கியக் காரணம்," என்றார். ![]() அதைத் தொடர்ந்து, இப்படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் வழங்கப்பட்டது. இவ்விருதை ஒளிப்பதிவாளர் ஆன்டனி டோட் மென்டில் பெற்றுக் கொண்டார். மும்பையை சேர்ந்த குடிசைவாழ் 18 வயது இளைஞன், 'கோடீஸ்வரன்' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 2 கோடி ரூபாய் பரிசை வெல்வது, அதில் காதலையும் சொல்வதே 'ஸ்லம்டாக் மில்லியனர்' கதை! |
| Last Updated on Monday, 23 February 2009 08:39 |
| | எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து | |