Nigazhvugal

Tuesday
May 21st
ஹாலிவுட்டில் செல்வாக்கு பெற்ற 'ஜெய் ஹோ', 'ஸ்லம்டாக்'! PDFPrintE-mail
Saturday, 28 February 2009 00:11

வாஷிங்டன் : ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் வரும் பாடலின் முதல் சொல்லான 'ஜெய் ஹோ' மற்றும் அப்படத் தலைப்பில் வரும் 'ஸ்லம்டாக்' ஆகியவை 2008-ம் ஆண்டு ஹாலிவுட்டில் செல்வாக்கு பெற்ற இரண்டு சொற்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

ஜெய் ஹோ என்றால் இந்தியில் வெற்றி பெற்றோம் என்று பொருள். அதைப் போல ஸ்லம்டாக் என்பது மும்பையில் குடிசைப் பகுதியில் வாழும் சிறுவனைச் செல்லமாக அழைக்கும்படியாக பொருள் தருகிறது.

2008-ம் ஆண்டில் ஹாலிவுட்டில் செல்வாக்கு மிகுந்த முதல் 10 சொற்களில், 'ஜெய் ஹோ' மற்றும் 'ஸ்லம்டாக்' ஆகிய இரண்டு சொற்களும் இடம்பெற்றுள்ளது என்பது குளோபல் லாங்குவேஜ் மானிட்டர் நடத்திய 6-வது ஆண்டு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக குளோபல் லாங்குவேஜ் மானிட்டரின் தலைமை சொல் ஆராய்ச்சியாளரும் தலைவருமான பால் ஜே.ஜே. பாயக் கூறுகையில், "திரைப்படச் சொற்களை வழங்கியதில் 2008 மறக்க முடியாத ஆண்டாகிவிட்டது. ஒரு இந்திச் சொல்லும், மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள லயோட்டின் பழங்குடியனர் சொல்லும் சிறப்பிடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது," என்றார்.

ஹாலிவுட்டில் 2008-ல் ஆதிக்கம் செலுத்திய 10 சொற்கள்

1. ஸ்லம்டாக் - படம் : ஸ்லம்டாக் மில்லியனர்
2. ஜெய் ஹோ - ஸ்லம்டாக் மில்லியனர்
3. நியூக் தி ஃபிரிட்ஜ் - இண்டியனா ஜோன்ஸ்
4. ஹ்மோங்க் - கிராண் டொரினோ
5. டிவிங்கி டிஃபென்ஸ் - மில்க்
6. ட்ஜெம்பே - தி விசிட்டர்
7. தேர் ஆர் நோ கோ இன்சிடென்ட்ஸ் - குங் ஃபு பாண்டா
8. வாட் டஸ் நாட் கில் யூ மேக்ஸ் யூ.. ஸ்ட்ரேஞ்சர் - தி டார்க் நைட்
9. போஸ்துமஸ் (தி ரெஸ்ட்லர்)
10. கேத்ரினா (பெஞ்சமின் பட்டன்)

(இதுபோல் நமது தமிழ் சினிமாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் எந்தத் தமிழ்ச் சொற்கள் செல்வாக்கு பெற்றுள்ளது என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்... ('என்னக் கொடுமை சரவணன் இது' என்கிறீர்களா?)

 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |