Nigazhvugal

Tuesday
May 21st
'வேலைக்கு செல்லும் பெண்களில் 4-ல் மூவருக்கு மன அழுத்தம்'PDFPrintE-mail
Sunday, 08 March 2009 09:21

இந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்களின் விகிததில் நான்கில் மூவருக்கு மன அழுத்தம் உள்ளிட்ட வாழ்க்கை முறை உடல் பாதிப்புகள் ஏற்படுவதாக, 'சர்வதேச மகளிர் தினத்தை'யொட்டி மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவில் தெரியவந்துள்ளது.

மகளிர் தினம் இன்று (மார்ச் 8) உலகம் முழுவதும அனுசரிக்கப்படும் நிலையில், "பிரிவென்டிவ் ஹெல்த் கேர் அண்ட் கார்ப்பரேட் ஃபீமேல் வொர்க் ஃபோர்ஸ்' என்ற கருப்பொருளில் அசோசம் என்றழைக்கப்படும் வர்த்தகம் மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு சனிக்கிழமை ஆய்வு முடிவுகளை வெளியிட்டது.

இந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்களும், அவர்களது ஆரோக்கியமும் என்பது குறித்த இந்த ஆய்வு முடிவின் சாரம் இதோ...

* இந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்களில் 68 சதவிகிதத்தினர் உடல்பருமன், மன அழுத்தம், தொடர் முதுகு வலி , நீரிழிவு மற்றும் ஹைபர் டென்ஷன் உள்ளிட்ட வாழ்க்கை முறை உடல்- மன பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

* நகர்பகுதிகளில் வசிக்கும் வேலைக்குப் போகும் பெண்களில் 27 சதவிகிதத்தினரின் உடல் பாதிப்புகள் சமூகத்துக்கும், தொழில்துறைக்கும் கவலைக்குரியதாகவே இருக்கிறது.

* ஒவ்வொரு நாளும் நீண்ட நேரம் அலுவலகத்தில் பணிபுரிவதே பெண்களுக்கு 75 சதவிகித பாதிப்புக்கு காரணம். இதனால் கோபம், வருத்தம், மன அழுத்தம் உள்ளிட்ட உளவியல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

* வேலைபளு காரணமாக 53 சதவிகித பெண்கள் தங்களது காலை உணவையும், மதிய உணவையும் தவிர்க்கின்றனர். இதனால், மிகுந்த உடல் பாதிப்பு ஏற்படுகிறது.

* தற்போதையை உலக பொருளாதார வீழ்ச்சி காரணமாக, வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் பெண்கள் பலரும் உள்ளனர். இதனால், அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய ஊடகம், சுற்றுலா, அவுட் சோர்சிங் போன்ற துறைகளில் பணிபுரிய வேண்டிய நிலைக்கு பெண்கள் பலரும் தள்ளப்படுகின்றனர்.

* அலுவலகத்தில் வேலை செய்துகொண்டே, குடும்பத்தையும் கவனிப்பது என்ற பல ரோல்களில் பெண்கள் இயங்குவதால், அவர்களது ஆரோக்கியத்தின் மீது கூட கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

* வேலைபளு உள்ளிட்ட பிரச்னைகள் காரணம் மட்டுமின்றி, தூக்கமின்மை, உடற்பயிசி மேற்கொள்ளாதது, சூரிய ஒளி படாதது, ஊட்டச்சத்து குறைவு, பெண்களில் ஒரு பகுதியினர் அதிக அளவில் மது அருந்துவது, போதைபொருள் பயன்படுத்துவது உள்ளிட்ட காரணங்களாலும் மன அழுத்தம் ஏற்படுகிறது.

* வேலைக்குச் செல்லும் பெண்களில் 77 சதவிகிதத்தினர் வழக்கமான ஹெல்த் பரிசோதனையைக் கூட தவிர்த்துவிடுகிறார்கள்.

* மருத்துவத்துக்கு 47 சதவிகித பெண்கள் ஆண்டொன்றுக்கு ரூ.500-க்கும் குறைவாகவே செலவிடுகின்றனர். உடல்பருமன், மன அழுத்தம் போன்ற பிரச்னைகளை போக்கிக் கொள்ள 22 சதவிகித பெண்கள் ரூ.500-ல் இருந்து ரூ.5000 வரை செலவிடுகின்றனர்.

* குறைந்த இரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா, எலும்பு போன்ற பிரச்னைகளுக்கு 29 சதவிகித வேலைக்குச் செல்லும் பெண்கள் ரூ.5,000-ல் இருந்து ரூ.50,000 ஆயிரம் வரை செலவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்காவும், ஆண்களுக்கு நிகராக சமூகத்தில் அந்தஸ்தைப் பெருவதற்காகவும் பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டியது அவசியமே.

இந்தச் சூழலில், அத்தகைய பெண்களுக்கு கணவன்மார்கள் ஆதரவும், அன்பும் நல்குவதோடு, குடும்ப பாரத்தில் சரிவிகித பங்கெடுத்துக் கொள்வது சாலச்சிறந்தது.

 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |