| ரஹ்மானுடன் பணிபுரிவதை நம்பவே முடியவில்லை: ஆஸி. பாடகி | ![]() | ![]() | ![]() |
| Sunday, 08 March 2009 08:48 |
அக்சய் குமார், சஞ்சய் தத், காத்ரீனா கைஃப் நடிக்கும் இந்திப் படமான 'ப்ளூ'-வில் ஆஸ்திரேலிய பாப் பாடகி மினோக் நடிப்பதுடன், படத்தில் ஒரு பாடலையும் பாடுகிறார். இதுகுறித்து அவர் ஆஸ்திரேலிய பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், "ரஹ்மானுடன் பணிபுரிவது மாபெரும் அனுபவம். பாஃப்டா விருது விழாவில் அவரை முதலில் சந்தித்தேன். விரைவிலேயே அவருடன் பாலிவுட்டில் பணிபுரிவேன் என்று நம்பவே முடியவில்லை," என்றார். மேலும், "பாலிவுட்டில் பணிபுரிவது பிடித்துள்ளது. மேலும் சில படங்களிலும் நடிக்க முடிவு செய்துள்ளேன்," என்றார் அவர். கடலில் மூழ்கும் உல்லாச கப்பல் பற்றிய தி டீப் என்ற ஹாலிவுட் படத்தைத் தழுவியே, 'ப்ளூ' திரைப்படம் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதில், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை தான் ஹைலைட் என பாலிவுட் வட்டாரம் கூறுகிறது. |
| Last Updated on Sunday, 08 March 2009 08:58 |
| | எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து | |