| சினிமாவில் உள்துறை அமைச்சராக அமர் சிங்! | ![]() | ![]() | ![]() |
| Monday, 16 March 2009 23:08 |
லக்னோ : சமாஜ் வாதி கட்சியின் பொதுச் செயலாளர் அமர் சிங் ஒரு இந்தித் திரைப்படத்தில் உள்துறை அமைச்சராக நடிக்கவுள்ளார். நிஜ வாழ்க்கையில் ஏற்காத பதவியை, சினிமா மூலமாக ஏற்கவுள்ளார் அமர் சிங்! பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் தேவ் ஆனந்தின் படத்தில் தான் அவர் நடிக்கவிருக்கிறார். அமர் சிங் ஞாயிற்றுக்கிழமை தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதன் பிறகு, சாதரணமாக செய்தியாளர்களுடன் சிரித்து பேசிக்கொண்டிருக்கும் போதே, தாம் சினிமாவில் நடிக்கப் போகும் தகவலைச் சொல்லியிருக்கிறார். தேவ் ஆனந்தின் தீவிர ரசிகர் என்று கூறிய அவர், தேவ் ஆனந்த் படத்தில் நடிப்பது பெருமையைத் தருகிறது, என்றார். அமர் சிங் நடிக்கும் படத்தின் பெயர், 'சார்ஜ்ஷீட்'! சமாஜ் வாதி கட்சி சார்பில் ல்க்னோ தொகுதியில் போட்டியிடும் நடிகர் சஞ்சய் தத்திடம், அமர் சிங்கிற்கு நடிக்க கற்றுக் கொடுப்பீர்களா என்று கேட்டதற்கு, "அவருக்கு பயிற்சி கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. எந்த விஷயத்தையும் எளிதில் புரிந்துகொண்டு செய்து விடுவார்," என்றார் சிரித்துக் கொண்டே! |
| | எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து | |