Nigazhvugal

Wednesday
May 22nd
பார்பி பொம்மை அழைப்புக்கு ஐஸ் மறுப்புPDFPrintE-mail
Friday, 27 March 2009 16:07

குழந்தைகள் பெரிதும் விரும்பும் பார்பி பொம்மைகளுக்காக தோற்றம் அளிக்க முன்னாள் உலக அழகியும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மறுத்துள்ளார்.

உலகளாவிய அளவில் பார்பி பொம்மைகள் புகழ்பெற்றதாக விளங்குகிறது. இந்த பார்பி பொம்மைகளை தயார் செய்யும் நிறுவனத்தின் 50வது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் மாதிரி தோற்றம் கொண்ட பொம்மைகளை தயாரிக்க திட்டமிட்டது.

இதற்காக அந்த நிறுவனம் ஐஸ்வர்யா ராயை அணுகியுள்ளது. ஆனால் அந்த நிறுவனத்தின் அழைப்பை ஏற்க ஐஸ்வர்யா ராய் மறுத்துவிட்டார்.

நடிப்பில் தாம் மிகவும் பிசியாக இருப்பதால் தம்மால் பார்பி பொம்மை நிறுவனத்தின் அழைப்பை ஏற்க இயலாது என்று அவர் கூறிவிட்டதாக தெரிகிறது.

இதையடுத்து பார்பி நிறுகூனம் கத்ரினா கைப்பை அணுகியிருப்பதாக கூறப்படுகிறது.

 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |