| ரஹ்மானுக்கு புதிய கவுரவம் | ![]() | ![]() | ![]() |
| Thursday, 02 July 2009 12:56 |
ஆஸ்கர் விருதை தேர்ந்தெடுத்து வழங்கும் அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சைஸ் அமைப்பு ரஹ்மானை கவுரவ உறுப்பினராக சேர அழைப்பு விடுத்துள்ளது. பொழுதுபோக்கு உலகில் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த அங்கீகாரம் முதல்முறையாக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்துள்ளது. ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர் விருது வழங்கப்பட்ட பிறகு ஹாலிவுட் அவர் மீது ஒரு கண் வைத்துள்ளது. ரஹ்மானுடன் பணியாற்ற உலகளவில் பல்வேறு ஹாலிவுட் பிரபலங்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் ரஹ்மானுக்கு இந்த கவுரவ உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. ரஹ்மானுக்கு மட்டுமின்றி இந்த கவுரவம் ஸ்லம்டாக் படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அழைப்புக்கு ரஹ்மான் தனது வலைதளத்தில் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். |
| | எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து | |