Nigazhvugal

Saturday
May 25th
எஸ்எம்எஸ்சில் முழு நாவல் வெளியீடுPDFPrintE-mail
Tuesday, 14 July 2009 14:57

புதுடெல்லி - புத்தகத்தை திறந்து வைத்துக் கொண்டு நாவலைப் படிப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளதா? உங்களுக்கு உதவுவதற்காகவே செல்போனில் எஸ்எம்எஸ் மூலம் நாவலை அனுப்பும் திட்டம் முதல் முறையாக அறிமுகமாகியுள்ளது.

ஹார்பர் காலின்ஸ் இந்தியா என்ற புகழ்பெற்ற பதிப்பக நிறுவனம் முதல்முறையாக எஸ்எம்எஸ் மூலம் நாவலை வெளியிடும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. பிங்கி விராணி என்பவர் எழுதிய டெஃப் ஹெவன் என்ற நாவல் எஸ்எம்எஸ் மூலம் செல்-நாவலாக வெளிவருகிறது.

90 செல்போன் எஸ்எம்எஸ்களாக பிரிக்கப்பட்டுள்ள இந்த நாவல் ரிலையன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். மேலும் இந்த நாவல் ஆடியோ வடிவத்திலும் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

செல்போன்களில் நாவலை எஸ்எம்எஸ் வழியாக படிக்கவும் கேட்கவும் முடியும் என்பதே மிகவும் புதுமையான முயற்சி என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் உயரதிகாரி கிருஷ்ணா துர்பா தெரிவித்தார்.

பதிபக நிறுவனம் நடத்தி வரும் தாங்கள் அதிக எண்ணிக்கையில் எங்களது வெளியீடுகள் வாடிக்கையாளர்களை சென்றடைய புதுமையான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும், எதிர்காலத்தில் இது போன்ற இன்னும் சில புதுமையான முயற்சிகள் பரிசோதிக்கப்படும் என்றும் ஹர்பர் காலின்ஸ் பதிப்பகத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுகுமார் கூறியுள்ளார்.

ஞாயிற்றுக் கிழமை ஒன்றில் முழு சூரிய சிரகணம் ஏற்படும் நாளில் வாழ்க்கை மாற்றம் தொடர்பான கற்பனைக் கதையே டெஃப் ஹெவன் நாவலாகும்.

 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |