Nigazhvugal

Friday
May 24th
கார்கில் வெற்றி... வாருங்கள் அஞ்சலி செலுத்த..!PDFPrintE-mail
Sunday, 26 July 2009 07:01

சுதந்திர இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வு...

கார்கில் வெற்றி!!!

1971ல் நடந்த போரில் கடும் பின்னடைவைச் சந்தித்த பாகிஸ்தான், இந்தியாவுடனான நேரடியான மோதல்களை தவிர்த்து வந்தது. காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்து, பின்னர் காஷ்மீரில் ஐ.எஸ்.ஐ., மூலமாக பயங்கரவாதத்தை தூண்டிவிட்டது.

இதன் தொடர்ச்சியாகவே கடந்த 1999-ல் அசட்டு தைரியத்துடன் கார்கிலில் ஊடுருவியது, பாகிஸ்தான் படை!

குளிர்காலத்தில் உயரமான சிகரங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் என இரு நாட்டு வீரர்களும் பின்வாங்குவார்கள். பின்னர், கோடை காலத்தின் தொடக்கத்தில் மீண்டும் தங்களது வழக்கமான நிலைகளில் பாதுகாப்பு பணியை தொடர்வார்கள்.

இந்தக் காலக்கட்டத்தை பயன்படுத்தி, ஏற்கெனவே திட்டமிட்டபடி 1999-ம் ஆண்டு ஏப்ரலில் தங்களது படைவீரர்கள் ஏறத்தாழ 5 ஆயிரம் பேரை இந்தியாவின் கார்கில் பகுதியில் ஊடுருவச் செய்திருந்தது பாகிஸ்தான்.

இதற்கு பதிலடி தரும் வகையில் மே மாதம் இந்தியப் படையினர், 'ஆபரேஷன் விஜய்' என்ற பெயரில் ராணுவ நடவடிக்கையை தொடங்கி வெகுவேகமாக முன்னேறியது.

ஜூலை 26-ல் இந்தப் போர் நிறைவடைந்தது. கடுமையான இழப்புகளைச்  சந்தித்த பாகிஸ்தான் தலைதெறிக்க புறமுதுகிட்டு ஓட்டியது. இந்தியப் படையினருக்கே மகத்தான வெற்றி கிட்டியது.

பாகிஸ்தானிடம் இருந்து கார்கில் மலைச்சிகரங்கள் மீட்கப்பட்டன!

இந்தப் போரில் வெற்றி பெற, 500-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.

கார்கில் வெற்றியின் 10-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில், நமது இன்றைய அமைதியான வாழ்க்கைக்காக, தங்களது உயிரைநீத்த நம் நாட்டுப் படை வீரர்களுக்கு வீரவணக்கத்தைச் செலுத்துவோம்!

கார்கில் போரில் தங்களது இன்னுயிரை நீத்தவர்களைப் பற்றி மீண்டும் ஒருமுறை காண கீழே உள்ள படத்தை க்ளிக்குங்கள்...

கார்கில் போர் குறித்த வீடியோக்களுக்கு...

http://www.youtube.com/watch?v=VWauFm7jUos

http://www.youtube.com/watch?v=dot0f3bNK3A

http://www.youtube.com/watch?v=j80E1mHAohU

http://www.youtube.com/watch?v=j80E1mHAohU

http://www.youtube.com/watch?v=Wmehc8d0c08

Last Updated on Sunday, 26 July 2009 07:17
 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |