Nigazhvugal

Sunday
May 19th
'ஜனநாயக சாம்பியன்' மு.க.ஸ்டாலினுக்கு அண்ணா பல்கலை. டாக்டர் பட்டம்!PDFPrintE-mail
Thursday, 30 July 2009 08:30

சென்னை: இந்திய அரசியலில் புதிய தலைமுறையின் மிகச்சிறந்த பிரதிநிதியாக உள்ளதால்,௦ ௦௦௦௦௦௦ஜனநாயக சாம்பியனாகத் திகழும் தமிழக துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அண்ணாப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அண்ணாப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சிறப்பு குறிப்புரையில், "தமிழகத்தின் துணை முதலமைச்சரான மு.க.ஸ்டாலின், இந்திய அரசியலில் புதிய தலைமுறையின் சிறந்த பிரதிநிதி ஆவார். இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவரான கலைஞர் கருணாநிதியின் மகனான அவர், அரசியலில் தியாகம், விடாமுயற்சி, தொடர்உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவற்றை தன்னகத்தே கொண்டு, கடினமான பாதையில் நடந்து வந்தவர்.

அவர், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளின் தீரமிக்க, துணிவுமிக்க, சமாதானம் செய்து கொள்ளாத பாதுகாவலராக விளங்கி வருகிறார். அவர், பல்லாண்டு காலம், கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் தோளோடு தோளாக பணியாற்றிய பிறகே, சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிட முடிந்தது குறிப்பிடத்தக்கது.

சட்டமன்றத்தின் மரபுகளை சிறப்பான முறையில் கடைபிடிப்பவராகவும், கண்ணியம் மற்றும் மரியாதையுணர்வு, மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் தன்மை போன்றவற்றாலும், அவர் மிகச் சிறந்த பெயரையும், புகழையும் சம்பாதித்துள்ளார். அவர் அனைத்து அரசியல் கட்சியினருடனும் சுமுகமான உறவை வைத்துக்கொண்டிருப்பவராவார். எந்த ஒரு பொருளின் மீதான விவாதத்தின்போதும் ஸ்டாலின் அங்கு இருக்க நேர்ந்தால் அந்த விவாதம் மேன்மைமிக்கதாக அமையும். அவர், பல்வேறு துறைகள் தொடர்புடைய சட்டமசோதாக்களை சட்டமன்றத்தில் சிறப்பான முறையில் தாக்கல் செய்து விளக்கம் அளித்து அனைவரின் மரியாதையையும் பெற்றிருக்கிறார்.

சென்னையின் மேயராக இருந்தபோது நகரின் மிக முக்கிய இடங்களில் 9 மேம்பாலங்களை கட்ட காரணமாக ஸ்டாலின் இருந்தார். தமிழகத்தை தொழில்மயமான மாநிலமாக மாற்றுவதில், துணை முதலமைச்சரின் கவனம் தற்போது திரும்பியுள்ளது. தமிழகத்தை மிகவும் வளர்ச்சியடைந்த நவீன வசதிகளை கொண்ட மாநிலமாக மாற்ற தமிழக முதலமைச்சர் கருணாநிதி கொண்டிருக்கும் அதே பார்வையை, ஸ்டாலினும் கடைபிடித்து வருகிறார். பணிவான குணத்துடன் கூடிய அவரது சிறப்பான செயல்பாடுகள் சாதாரண மக்களின் பாராட்டை பெற்றுள்ளது.

அவரது நீண்ட கால அரசியல் வாழ்க்கையில் கோடிக்கணக்கான ஆதரவாளர்களை பெற்றது மட்டுமின்றி, எதிராளிகளின் மதிப்பையும் சம்பாதித்துள்ளார். அவரது செயல்பாடுகள், இளமைத் துடிப்பையும், சுதந்திரத்தன்மையையும் கொண்டுள்ளது. அவர் ஜனநாயகத்தின் சாம்பியனாகவும், ஏழைகளின் பங்காளனாகவும், சிறந்த அரசியல்வாதியாகவும், புதிய கொள்கைகளை வகுப்பவராகவும், சிறந்த நிர்வாகியாகவும் உருவெடுத்துள்ளார்," என்பன உள்ளிட்ட பல்வேறு சிறப்பு தகவல்கள் மு.க.ஸ்டாலின் பற்றி அந்த குறிப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணாபல்கலைக்கழகம் அண்ணா நூற்றாண்டு சிறப்பு பட்டமளிப்புவிழாவை ஆகஸ்ட் 1-ம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடத்தவுள்ளது.

இவ்விழாவில் தமிழக துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இந்திய விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோரை பாராட்டி அவர்களுக்கு கெளரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்படுகிறது.

டாக்டர் பட்டங்களை தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா வழங்குகிறார். உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி முன்னிலை வகிக்கிறார். அண்ணாபல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.ஆனந்த கிருஷ்ணன்பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சிறப்புரையாற்றுகிறார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி.மன்னர் ஜவகர் வரவேற்று பேசுகிறார்.

 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |