| ஆணுறையில்லா பாலுறவை ஊக்குவிக்கும் ஆய்வுக்கு எதிர்ப்பு! | ![]() | ![]() | ![]() |
| Tuesday, 04 August 2009 07:56 |
லண்டன்: ஆணுறையில்லா பாலுறவால் மன ஆரோக்கியம் மிகுந்து காணப்படும் என்ற மருத்துவ ஆய்வுக்கு, விழிப்பு உணர்வு குழுக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வெஸ்ட் ஆஃப் ஸ்காட்லாண்ட் யுனிவர்சிட்டியின் பேராசிரியர்கள் ஸ்டுவர்ட் ப்ரூடி, பெய்ஸ்லி மற்றும் உடன் பணிபுரிவோர் இணைந்து பாலுறவு குறித்த ஒரு மருத்துவ ஆய்வை மேற்கொண்டனர். இதில் பாதுகாப்பற்ற, அதாவது ஆணுறை அணியாமல் மேற்கொள்ளப்படும் பாலுறவால் ஆண் - பெண் இருபாலரின் மன ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது என்று அந்த ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அத்துடன், ஆணுறையுடன் மேற்கொள்ளப்படும் பாலுறவால் மன ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது என்றும் அந்த ஆய்வு முடிவு கூறுவதாக அவர்கள் குறிப்பிட்டனர். மன ஆரோக்கியம் மட்டுமின்றி உடல் ஆரோக்கியமும் ஆணுறை அணியாமல் பாலுறவு கொள்வதன் பலனாக ஏற்படுகிறது என்றார் ஆய்வாளர் ப்ரூடி. போர்ச்சுக்கலைச் சேர்ந்த 99 பெண்கள் மற்றும் 111 ஆண்களின் பாலுறவு ஈடுபாடுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆய்வுக்குட்பட்டவர்களில் ஆணுறை அணியாமல் பாலுறவு கொள்ளும் பழக்கம் உடையவர்களால் தங்களது மன அழுத்தப் பிரச்னையை எளிதில் கையாள முடிவதோடு, அதிலிருந்து மீண்டும் இயல்பு நிலைக்கு வர முடிகிறது. ஆனால், ஆணுறை அணிந்து பாதுகாப்புடன் பாலுறவு கொள்வோருக்கு ஏற்படும் மன அழுத்தம் மேலும் மேலும் அதிகரிக்கிறதே தவிர, அதைக் குறைப்பதற்கான திறன் அவர்களிடம் இல்லை என்கிறது அந்த ஆய்வு முடிவு. அதேநேரத்தில், தேவையற்ற கர்ப்பத்துக்கும், பல்வேறு பாலியல் நோய்களுக்கும் வழிவகை செய்யும் பாதுகாப்பற்ற பாலுறவுக்கு ஊக்குவிக்கும் இந்த ஆய்வுக்கும் பாலியல் ஆரோக்கிய விழிப்பு உணர்வுக் குழுக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். |
| | எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து | |