Nigazhvugal

Sunday
May 19th
பன்றிக் காய்ச்சல் முன்னெச்சரிக்கை : 'கர்சீஃப்' தான் சிறந்தது!PDFPrintE-mail
Thursday, 13 August 2009 06:28

பன்றிக் காய்ச்சலுக்கான சுவாச முகமூடியை பொதுமக்கள் அனைவரும் அணிய வேண்டிய அவசியம் இல்லை. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு கர்சீஃப் (கைக்குட்டை) தான் சாலச் சிறந்தது.

இதனை டெல்லியில் தெரிவித்த இந்திய மருத்துவ கவுன்சில் துணைத்தலைவர் அஜய் காம்பீர் மேலும் கூறுகையில், "பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பன்றி காய்ச்சல் பாதித்தவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பவர்கள் மட்டும் சுவாச பாதுகாப்பு முகமூடியை பயன்படுத்தினால் போதுமானது.

நுண்ணிய பொருட்களை வடிகட்டுவதற்கு 2 விதமான சுவாச முகமூடிகள் உள்ளன. அதில் ஒன்று என்-95 என்பதாகும். இது குளிர் காய்ச்சலுக்கு பயன்படுத்த விசேஷமாக தயாரிக்கப்பட்டது.

குறிப்பாக இந்த முகமூடி, பன்றிக் காய்ச்சல் பாதித்த நோயாளிகளை கவனித்து கொள்ளும் சுகாதார பணியாளர்கள் அணிவதற்கு உரியது ஆகும். இதை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியாது. 24 மணி நேரம் வரைதான் பயன்அளிக்கும். அதன்பிறகு தூக்கி எறிந்து விடவேண்டும்.

இன்னொரு முகமூடி, மருத்துவ அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்துவதாகும். இது எந்தவிதமான நோய் கிருமியையும் தடுக்கும் தன்மை கொண்டது. இந்த முகமூடி 4 முதல் 6 மணி நேரம் மட்டுமே பயன் தருவதாக இருக்கும்.

எனவே, விலை உயர்ந்த சுவாச பாதுகாப்பு முகமூடிகளை பொதுமக்கள் வாங்கி அணியவேண்டிய அவசியம் கிடையாது. ஒரு கர்சீப் இருந்தால் கூட போதும். அதை முகத்தில் கட்டிக் கொள்ளலாம். ஆனால், அதை 2 மணி நேரத்துக்கு ஒரு முறை துவைக்கவேண்டும்.

ஒவ்வொரு வைரசும் உங்களுடைய கர்சீப்பில் ஒரு மணி நேரம் வரை இருக்கும். கைகளில் 15 நிமிடங்கள் இருக்கும்.

பெரியவர்களுக்கு நோய் எச்.1.என்1. வைரஸ் தொற்றினால் 7 நாட்கள் வரை இருக்கும். ஆனால் குழந்தைகளிடம் இரண்டு வாரங்கள் வரை இருக்கும். பன்றி காய்ச்சலுக்கு 48 மணி நேரத்துக்குள் சிகிச்சை பெறுவது சிறந்த பலனை தரும்.

எச்1என்1 என்னும் வைரஸ் எச்1என்2 ஆக மாறலாம். ஆனால் நாங்கள் இப்போது எச்1என்1 வைரஸ் பற்றித்தான் கவலைப்படுகிறோம். இந்த வைரஸ் மீண்டும் வரலாம். அதையும் நாம் எதிர்கொள்ள தயாராகத்தான் இருக்கவேண்டும்," என்றார் அஜய் காம்பீர்.

 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |