Nigazhvugal

Sunday
May 26th
சிகரெட் மீது எச்சரிக்கை: மீறுவோருக்கு 2 ஆண்டு சிறைPDFPrintE-mail
Wednesday, 02 September 2009 21:58

சிகரெட், பீடி மீது எச்சரிக்கை சின்னம் பொறிக்காத புகையிலைப் பொருள் உற்பத்தியாளர்களுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மத்திய அரசின் உத்தரவை மீறும் உற்பத்தியாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது 2 ஆண்டு ஜெயில் தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

இரண்டாவது தடவையாக விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதத் தொகை 10 ஆயிரம் ரூபாயாகவும், ஜெயில் தண்டனை 5 ஆண்டுகளாகவும் உயர்த்தப்படும்.

புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வோர், வினியோகிப்போர் விதிகளை மீறினால் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை அல்லது இரண்டும் சேர்த்தும் விதிக்கப்படும்.

இரண்டாவது தடவையாக விதிகளை மீறினால் அபராதம் 3 ஆயிரம் ரூபாயாகவும், ஜெயில் தண்டனை 2 ஆண்டு காலமாகவும் இருக்கும்," என்று கூறப்பட்டுள்ளது.

Last Updated on Wednesday, 02 September 2009 22:42
 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |