| யுஎஸ் ஓபன் பட்டம் வென்றது பயஸ் இணை | ![]() | ![]() | ![]() |
| இதர விளையாட்டுகள் |
| Monday, 14 September 2009 07:28 |
நியூயார்க் - அமெரிக்காவில் நடைபெற்று வரும் யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியானஸ்டர் பயஸ் - செக் குடியரசின் லுகாஸ் லவுகி இணை பட்டம் வென்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் பயஸ் - லவுகி இணை, இந்தியாவின் மகேஷ் பூபதி - பகாமாசின் மார்க் நோயல்ஸ் இணையுடன் இறுதிச் சுற்று ஆட்டத்தில் மோதியது. ஆட்டத்தின் முதல் செட்டில் பூபதி இணை சிறப்பாக ஆடி வெற்றி பெற்றது. எனினும் அடுத்த சுற்றுகளில் பயஸ் அற்புதமாக ஆடி ஆடவர் இரட்டையர் பட்டத்தை பயஸ் - லவுகி இணை 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இது இந்தப் பருவத்தில் பயஸ் இணை வென்றுள்ள இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். கடந்த ஜூன் மாதம் இந்த இணை பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. இது இந்த இணை பெற்றுள்ள இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் பட்டமுமாகும். பயஸ் இதுவரை தனது டென்னிஸ் வரலாற்றில் இதுவரை 41 பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தோல்வியின் மூலம் மகேஷ் பூபதி கடந்த 7 ஆண்டுகளாக இரட்டையர் பட்டம் எதையும் வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளார். கடந்த 2002ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை பூபதி வென்றது குறிப்பிடத்தக்கது. |
| | எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து | |