| பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாது : மத்திய அரசு அறிவிப்பு | ![]() | ![]() | ![]() |
| வணிகம் |
| Wednesday, 21 October 2009 07:40 |
புதுடெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை திடீரென அதிகரித்துள்ள போதிலும், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை தற்போது ஒரு பீப்பாய் விலை 80 டாலராக உள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோராவிடம் நிருபர்கள் கேட்ட போது, தற்போதுள்ள நிலைமையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் எண்ணம் இல்லை என்று தெரிவித்தார். கச்சா எண்ணை விலை உயர்வால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும், எண்ணை நிறுவனங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அவர்களுடைய கருத்துகளையும் கேட்டுள்ளோம் என்றும் அவர் கூறினார். மத்திய அரசு கடந்த ஜுலை 1-ம் தேதி பெட்ரோல், டீசல் விலைகளை 10 சதவீதம் வரை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
|
| | எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து | |