| இந்தியாவில் இறக்குமதி செய்யும் அரிசிக்கு சுங்க வரி ரத்து | ![]() | ![]() | ![]() |
| வணிகம் |
| Wednesday, 28 October 2009 00:19 |
புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு சுங்க வரி ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து சுங்கத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த மாதம் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடந்த கூட்டத்தில், நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு வரிச்சலுகை அளிக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகை அரிசிக்கும் இதுவரை வசூலிக்கப்பட்ட 70 சதவீத சுங்க வரி, அடுத்த ஆண்டு (2010) செப்டம்பர் மாதம் வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது,' என்றார் அவர். |
| | எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து | |