| சிங்களப் படம் - சூர்யா மறுப்பு | ![]() | ![]() | ![]() |
| Friday, 06 November 2009 12:05 |
சிங்கள இயக்குனரின் படத்தில் தாம் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக வெளியான செய்தி பொய்யானது என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். சிங்கள படத்தில் நடிக்கும் உத்தேசம் தனக்கு கொஞ்சமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். நடிகர் சூர்யா சிங்கள இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் தயாரிக்கப்படும் சிங்கள படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என்ற செய்தி வெளிவந்தது.இதற்கு தமிழ் உணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், தமிழர்களின் உணர்வுகளை மதித்து சிங்களவர் படத்தில் நடிப்பதை நடிகர் சூர்யா கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் நடிகர் சூர்யா இச் செய்தி குறித்து விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிங்களப்படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதாக வெளிவந்த செய்தி அதைப் படித்தவர்களை மட்டுமின்றி என்னையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நான் இப்போது ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் சிங்கம் படத்தில் நடித்து வருகிறேன். ராம் கோபால் வர்மா இயக்கத்தில் ஒரு இந்தி படம் ஒன்றில் நடித்து உள்ளேன். உதயநிதி தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ஷனில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன். இதை தவிர வேறு எந்த படத்திலும் நடிக்க நான் ஒப்புதல் அளிக்கவில்லை. சிங்கள இயக்குனரின் இயக்கத்தில் சிங்கள படத்தில் நான் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது. சிங்கள படத்தில் நடிக்கும் உத்தேசம் எனக்கு கொஞ்சமும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். |
| | எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து | |