| விமான நிலையத்தில் தகராறு - மைக் டைசன் கைது | ![]() | ![]() | ![]() |
| இதர விளையாட்டுகள் |
| Thursday, 12 November 2009 10:23 |
லாஸ் ஏஞ்சல்ஸ் - விமான நிலையத்தில் தகராறு செய்தததைத் தொடர்ந்து முன்னாள் குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் கைது செய்யப்பட்டுள்ளார். தனது 20வது வயதில் முதன்முதலில் குத்துச் சண்டைப் போட்டியில் சர்வதேச பட்டம் வென்ற பெருமையைப் பெற்றவர் மைக் டைசன். இரும்பு மைக் என்றும் வர்ணிக்கப்பட்டவர் அவர் . நேற்று அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் புகைப்படக்காரர் ஒருவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து போலீசார் மைக் டைசனை கைது செய்துள்ளனர். எனினும் இதுபற்றிய கூடுதல் விவரங்கள் எதையும் போலீசார் தெரிவிக்கவில்லை. கடந்த 1992ம் ஆண்டு இளம்பெண் ஒருவருக்கு பாலியல் ரீதியல் துன்புறுத்தல் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட மைக் டைசன் 3 ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது 43 வயதாகும் டைசன் கடந்த 2005ம் ஆண்டில் குத்துச் சண்டை போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. |
| | எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து | |