Nigazhvugal

Friday
May 24th
திருட்டு விசிடி - கமல், ரஜினி கருத்துக்கள் ஒரு பார்வைPDFPrintE-mail
Wednesday, 06 January 2010 05:29

ஜக்குபாய் படம் வெளிவருதற்கு முன்பாகவே அந்தப் படம் இணைய தளத்தில் வெளியாகி அதன் மூலம் திருட்டு விசிடியும் வந்துவிட்ட விவகாரம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக ரஜினி, கமல், சரத்குமார், ராதிகா, கே.எஸ் ரவிகுமார், தயாரிப்பாளர் சங்கம் மற்றும் இயக்குனர் சங்கம் என அனைவரும் படையெடுத்து வந்து பத்திரிகையாளர்களை சந்தித்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

திருட்டு விசிடி என்பது உலகம் முழுவதும் உள்ள பிரச்சனை. போலியாக இதுபோன்ற பொருட்களை தயாரிப்பது திரைப்படத்துறை மட்டுமின்றி எல்லா துறைகளிலுமே உள்ளது. புத்தகங்கள், உயிர்காக்கும் மருந்துகள் என பலவும் போலியாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள் சமூக விரோதிகளாகவும் தேச விரோதிகளாகவும் கருதப்படுகின்றனர் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அந்த வகையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது கமல்ஹாசன் கூறியது போல், திருட்டு விசிடி பணம் பயங்கரவாதிகளுக்கு செல்கிறது. அதைக் கொண்டு அவர்கள் குண்டு தயாரித்து மக்களையே கொல்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மையே. இந்த உண்மையை தைரியமாக பேசிய கமலுக்கு பாராட்டுக்கள்.

இதே நேரத்தில் கமலிடம் இன்னொரு சந்தேகத்தையும் எழுப்ப வேண்டிய அவசியம் எழுகிறது. திருட்டு விசிடி தயாரிப்பவர்கள் பற்றி தைரியமாக பேசிய கமல், மும்பையில் பயங்கரவாதிகளுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கும் பாலிவுட் பிரபலங்கள் பற்றியும் பேச வேண்டும்.

திருட்டு விசிடி தயாரிக்காமல் நேரடியாக படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், அதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் எனப் பலரும் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கின்றனர்.

மும்பையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தாவூத் இப்ராகிம் பணம் தான் பாலிவுட்டில் புழங்குகிறது என்ற ஒரு கருத்து உள்ளது.

இந்தி திரைப்பட நடிகர் சஞ்சய் தத்திற்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்டு தற்போது அவர் மீது ஆயுதத் தடை சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது.

இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட ஹெட்லியுடன் ராகுல் பட்டிற்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுபோன்ற ஏராளமான தொடர்புகள் பாலிவுட்டிற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்ளதாக கூறப்பட்டு பல தொடர்புகள் நிரூபிக்கப்பட்டும் உள்ளது.

எனவே திருட்டு விசிடிக்கு எதிராக ஆணித்தரமாக பேசியுள்ள கமல், இதுகுறித்தும் கொஞ்சம் பேச வேண்டும். பாலிவுட் ஒட்டுமொத்தமாக பயங்கரவாதிகளின் கைகளில் இருப்பதை மாற்ற யோசனை தெரிவிக்க வேண்டும்.

இந்தப் பிரச்சனையில் கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்படத் துறையினர் பலரும் மறந்து போன ஒன்றை ரஜினி எடுத்துக்கூறியிருக்கிறார். யாரோ திரைப்படத் துறைக்கே சம்பந்தமில்லாத ஒரு நபர், உள்ளே நுழைந்து திரைப்படங்களை திருட்டு விசிடிக்களாக தயாரிக்கவில்லை. திரைப்படத்துறையில் உள்ளவர்கள் இந்தச் செயலை செய்கின்றனர். இதில் முக்கிய குற்றவாளி திரைப்படத்துறைக்குள்ளேயே இருக்கிறார். ஒட்டுமொத்த திரைத்துறையும் நினைத்தால் அது யார் என்பதை கண்டுபிடித்துவிட முடியும்.  இதைத் தான் நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினி எடுத்துக்கூறியிருக்கிறார்.

 

Last Updated on Wednesday, 06 January 2010 05:33
 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |