Nigazhvugal

Sunday
May 19th
ஐஸ்வர்யாவுக்கு காய்ச்சல் - அமிதாப் கவலைPDFPrintE-mail
Friday, 12 February 2010 16:59

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்க திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தனது அன்பு மருமகளை பாசத்துடன் கவனித்துக் கொண்டிருக்கும் அமிதாப் இது தமக்கு மிகுந்த வருத்தமும் கவலையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தற்போது விபுல் ஷா இயக்கத்தில் ஆக்ஷன் ரீப்ளே என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்று காலை அவர் படப்பிடிப்பிலிருந்து கடும் காய்ச்சலுடன் வீடு திரும்பினார்.

உடனடியாக மருத்துவர் வந்து பார்த்து அவருக்கு சிகிச்சை அளித்த போதிலும் அவர் காய்ச்சலுடன் இருப்பதாக அமிதாப்பச்சன் தனது வலைத்தளத்தில் எழுதியுள்ளார். அவரால் பேசவோ எதையும் விழுங்கவோ முடியவில்லை என்றும் அமிதாப் குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி தனது மகன் அபிஷேக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராயை வந்து பார்த்த அபிஷேக் ஆறுதல் கூறிவிட்டு உடனடியாக படப்பிடிப்புக்கு சென்று விட்டார். எனினும் படப்பிடிப்பு காரணமாக தம்மால் அவருடன் இருக்க முடியவில்லை என்று அபிஷேக் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |