Nigazhvugal

Tuesday
May 21st
இணையத்தில் கிறுக்கல்கள் : பார்த்திபன் புகார்PDFPrintE-mail
Monday, 15 February 2010 15:30

தாம் எழுதி வெளியிட்ட கிறுக்கல்கள் புத்தகம் இணையத்தில் வெளியாகியிருப்பது குறித்து நடிகர் பார்த்திபன் போலீஸ் கமிஷனரிடம் நேரில்  புகார் கொடுத்துள்ளார்.
 

இது குறித்து நடிகர் பார்த்திபன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடந்த 2000-ம் ஆண்டில் ‘கிறுக்கல்கள்’ என்ற புத்தகத்தை நான் எழுதி வெளியிட்டேன். முதல்வர் கருணாநிதிதான் இந்த புத்தகத்தை விழா ஒன்றில் வெளியிட்டார். ரூ.250 விலையில் இந்த புத்தகத்தை நான் விற்பனை செய்தேன். இதுவரை யிலும் 30 ஆயிரம் புத்தகங்கள் அளவிற்கு விற்பனை செய்துள்ளேன். நேற்று முன்தினம் ஆன்லைன் மூலம் விளம்பரம் ஒன்றை பார்த்தேன்.

அதில் எனது ‘கிறுக்கல்கள்’ புத்தகத்தை இணையதளத்தில் வெளியிட்டு அதனை ரூ.495 செலுத்தி டவுண்லோடு செய்து கொள்ளலாம்  என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

பொருட்களை திருடுவதை விட உழைப்பை திருடுவது கொடுமையானது. அறிவுசார்ந்த நூல்களை இணையதளம் மூலம் திருடுவது எதிர்காலத்தில் இளைஞர்களை பாதிக்கும்.  அதனால் இணைய தளத்தில் வெளியிட்டு டவுண்லோடு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்துள்ளேன். 

இன்று மாலைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எனக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது. வ்வாறு பார்த்திபன் கூறினார்.

 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |