Nigazhvugal

Tuesday
May 21st
2011-12ல் ஒன்பது சதவிகித வளர்ச்சி கணிப்புPDFPrintE-mail
வணிகம்
Thursday, 25 February 2010 11:56
சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவின் பொருளாதார அடித்தளம் வலிமையடைந்திருப்பதன் விளைவாக 2011-12ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மீண்டும் 9 சதவிகித அளவை எட்டும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கணித்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் பிரணாப் இன்று மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அடுத்த சில மாதங்களில் உணவுப் பொருட்களின் விலை சற்று உயரக்கூடும் என்று அந்த அறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு நிர்ணவாகத்தில் தவறான கொள்கைகள் கையாளப்பட்டதன் விளைவாக உணவுப் பொருட்களுக்கான பணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்தில் இருப்பதாக bரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு துறையிலும் நிதியுதவித் திட்டங்கள் காரணமாக ஏற்பட்டுள்ள தாக்கத்தை ஆய்வு செய்து அந்த நிதியுதவித் திட்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக் கொள்ளவும் பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரைத்துள்ளது.

அடுத்த நான்காண்டுகளில் உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில ஒன்றாக இந்தியா இருக்கும் என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |