Nigazhvugal

Saturday
May 25th
இந்தியா வருகிறது ஃபேஸ்புக்PDFPrintE-mail
Tuesday, 16 March 2010 10:09

உலகின் மிகப்பெரிய சோஷியல் நெட்வொர்க் இணையதளமான ஃபேஸ்புக் தனது இந்தியச் செயல்பாடுகளை தொடங்க முடிவு செய்துள்ளது. இதன்படி விரைவில் ஐதராபாத்தில் அலுவலகம் ஒன்றை திறக்க இருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் இந்திய அலுவலகம் ஃபேளூ;புக்கின் முதலாவது ஆசிய அலுவலகமாக இருக்கும். இந்தியாவில் அலுவலகம் திறந்து தனது செயல்பாடுகளை தொடங்குவதன் மூலம் ஃபேஸ்புக் இந்தியாவில் வளர்ந்து வரும் பயன்பாட்டாளர்கள், விளம்பரதாரர்களுக்கு ஆதரவு அளிக்க திட்டமிட்டுள்ளது.

ஐதராபாத் அலுவலகத்தில் ஆன்லைன் விளம்பர சேவை, பல மொழி ஆதரவு போன்றவற்றை 24 மணி நேரமும் வழங்க ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது.

ஏற்கெனவே பாலோ அல்டோ, கலிபோர்னியா, டுப்ளின், அயர்லாந்து, ஆஸ்டின் மற்றும் டெக்சாஸ் ஆகிய இடங்களில் ஃபேஸ்புக் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஃபேஸ்புக் இயக்குனர் டான் ஃபால் கூறுகையில், இந்தியாவில் உள்ள மக்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்தி தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதிலும், கிரிக்கெட் மற்றும் ஹாக்கி ரசிகர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும், நண்பர்களை தொடர்பு கொண்டு படங்களை பகிர்ந்து கொள்ளவும் விரும்புகின்றனர். ஐதராபாத் அலுவலகம் இதற்கு பேருதவியாக அமையும் என்றார்.

ஃபேஸ்புக் கடந்த 2004ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் மொத்தம் 400 மில்லியன் பயன்பாட்டாளர்கள் உள்ளனர். 8 மில்லியன் இ;நதியர்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர்.

 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |