Nigazhvugal

Friday
May 24th
ஐபிஎல் - பணம் காய்க்கும் மரம்PDFPrintE-mail
Monday, 22 March 2010 09:40

விளையாட்டுக்களிலேயே அதிக வருவாயை ஈட்டக் கூடியது கிரிக்கெட்தான் என்றால் அதிலும் ஐபிஎல் போட்டிகள் பணம் காய்க்கும் மரம் என்பதை நிரூபித்திருக்கின்றன புதிதாக இரண்டு அணிகளின் ஏலம்.

ஏற்கெனவே ஐபிஎல்லில் உள்ள 8 அணிகளுடன் கூடுதலாக இரண்டு அணிகள் நேற்று ஏலத்தில் விடப்பட்டன. இதில் புனே அணியை 1702 கோடி ரூபாய்க்கு சஹாரா நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. கொச்சி அணியை  ரென்டஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம் 1533 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

இந்த இரண்டு அணிகளின் ஏலத்தொகை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் 8 அணிகள் ஏலத்தில் விற்கப்பட்டதை விட கூடுதல் தொகையாகும். கடந்த 2008ம் ஆண்டு முதன்முதலாக 8 அணிகள் ஏலத்தில் விற்கப்பட்ட போது ரிலையன்ஸ் நிறுவனம் மும்பை அணியை 441 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. அப்போது இவ்வளவு கூடுதல் தொகைக்கு ஒரு கிரிக்கெட் அணி ஏலம் எடுக்கப்படுவதை ஆச்சரியத்துடன் பார்த்தவர்கள் இது ஒரு Nதாட்டம் என்று வர்ணித்தனர்.

ஆனால் தற்போது இரண்டு அணிகள் ஏலத்தில் விற்கப்பட்டதில் 3235 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இது 8 அணிகள் விற்பனையில் கிடைத்ததை விட கூடுதலாகும். 8 அணிகளும் சேர்த்து 2008-ல் 2853 கோடி ரூபாய்க்கு மட்டுமே ஏலத்தில் விற்கப்பட்டது.

புதிதாக ஐபிஎல்லில் இணைந்துள்ள புனே மற்றும் கொச்சி அணிகள் 2011ம் ஆண்டு முதல் போட்டிகளில் பங்கேற்கும். இந்த ஒப்பந்தம் 10 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாகும்.

 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |