Nigazhvugal

Tuesday
May 21st
பொன்சேகா மனைவியிடம் இலங்கை விசாரணைPDFPrintE-mail
சர்வதேசம்
Monday, 22 March 2010 15:55

இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமாவிடம் இலங்கை புலனாய்வு அதிகாரிகள் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த விசாரணை நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை வரை நீடித்ததாக இலங்கை தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விசாரணைக்கு பின்னர் அதிகாரிகளிடம் பேசிய அனோமா தன் கணவருக்கு குளிர்சாதன அறை வழங்க வேண்டும் என்று கோரிக்வை விடுத்ததாக கூறப்படுகிறது. குண்டுக் காயங்கள் காரணமாக அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா அதிபர் தேர்தலில்  போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன் பின்னர் அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |