| ஐஸ்வர்யா ராய் - 4 படங்கள் - ரூ. 300 கோடி | ![]() | ![]() | ![]() |
| Tuesday, 23 March 2010 11:00 |
முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிப்பில் இந்த ஆண்டில் அடுத்தடுத்து 4 படங்கள் வெளியாகவுள்ளன. இந்தப் படங்களின் மொத்த மதிப்பு 300 கோடி ரூபாய் ஆகும். கடந்த ஆண்டில் ஐஸ்வர்யா ராய் நடித்து பிங் பேந்தர் என்ற ஹாலிவுட் படம் மட்டுமே வந்தது. ஆனால் இந்த ஆண்டு அடுத்தடுத்து 4 படங்கள் வெளியாகவுள்ளன. தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ரஜியுடன் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள எந்திரன், மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் உடன் ராவணன், ஆக் ஷன் ரீப்ளே மற்றும் குஜாரிஷ் ஆகிய நான்கு படங்களில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். எந்திரன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் 125 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ராவணன் 45 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கிறது. ஆக்ஷன் ரீப்ளே படம் 60 கோடி ரூபாய் செலவிலும் குஜாரிஷ் படம் 80 கோடி ரூபாய் செலவிலும் உருவாகிறது. இந்த நான்கு படங்களிலும் ஐஸ்வர்யா கடந்த ஆண்டில் இடைவிடாமல் நடித்தார். இதன் காரணமாக அவரது உடல் நலம் கூட பாதிக்கப்பட்டது. ஒரே ஆண்டில் வெளிவர உள்ள இந்த நான்கு படங்களும் ஐஸ்வர்யாவுக்காக மட்டுமின்றி பல்வேறு காரணங்களுக்காகவும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| | எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து | |