| கின்னஸ் சாதனை படைக்கும் கமல் சரிதை | ![]() | ![]() | ![]() |
| Monday, 05 April 2010 07:17 |
உலக நாயகன் கமல்ஹாசனின் சரிதை புத்தகம் கின்னஸ் சாதனையை படைக்கும் வகையில் உருவாகி வருகிறது. கமல்ஹாசனைப் போலவே அவரது ரசிகர்களும் வித்தியாசமாக சிந்தித்து செயல்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர்கள். இதற்கு உதாரணமாக திகழ்கிறார் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மணிகண்டன் என்ற ரசிகர். களத்தூர் கண்ணம்மா தொடங்கி தசாவதாரம் வரையில் கமல் நடித்த படங்கள் பற்றிய குறிப்புகள் கொண்ட சரிதைப் புத்தகம் ஒன்றை இவர் தயாரித்து வருகிறார். இந்தப் புத்தகத்தின் தலைப்பு தான் கின்னஸ் சாதனை படைக்கப் போகிறது. 1425 எழுத்துக்களுடன் 330 வார்த்தைகள் கொண்டதுதான் இந்தப் புத்தகத்தின் தலைப்பு. இதற்கு முன் இத்தாலியர் ஒருவர் 290 வார்த்தைகளை தலைப்பாக கொண்ட புத்தகத்தை எழுதி அதுதான் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தனது புத்தகத்தை கின்னசுக்கு அனுப்பி வைத்து, தனது அபிமான நடிகரின் பெயரை வரலாற்றில் பதிவு செய்ய முடிவு செய்துள்ளார் ஸ்ரீவில்லிபுத்தூர் மணிகண்டன். |
| | எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து | |