Nigazhvugal

Wednesday
May 22nd
பொன்சேகாவுக்கு தூக்கு - இலங்கை எச்சரிக்கைPDFPrintE-mail
சர்வதேசம்
Tuesday, 08 June 2010 09:25

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின் இறுதிகட்டத்தின் போது இலங்கை உயரதிகாரிகள் போர்க் குற்றங்களில் ஈடுபடுமாறு உத்தரவிட்டதாக பொன்சேகா தொடர்ந்து கூறி வந்தால் அவர் தூக்கிலிடப்படுவார் என்று இலங்கை அரசு எச்சரித்துள்ளது.

இலங்கை அரசின் பாதுகாப்புத் துறை செயலர் கோதபயே ராஜபக்சே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இலங்கை முன்னாள் ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த சரத்பொன்சேகா தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இலங்கையில் ஆட்சியைக் கவிழ்த்து ராணுவ ஆட்சியை ஏற்படுத்த சதி திட்டம் தீட்டியதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிபிசியில் ஹார்டு டாக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கோதபயே, பொன்சேகா தம்மை ஒரு மோசடிப் பேர்வழி என்பதையும், அரசுக்கு எதிராக துரோகம் இழைத்தவர் என்பதையும் நிரூபித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் பாதுகாப்பு செயலர் கோதபயே ராஜபக்சே, ராணுவ அதிகாரிகளிடம் சரணடையும் விடுதலைப் புலிகளை கொலை செய்யுமாறு உத்தரவிட்டதாகவும், அதற்கு தம்மிடம் சாட்சி உள்ளது என்றும் பொன்சேகா கூறியுள்ளார்.

பேட்டியின் போது இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கோதபயே, பொன்சேகா ஒரு மோசடிப் பேர்வழி என்றும், தேசத் துரோகம் இழைத்தவர் என்றும் ஆத்திரத்துடன் கூறினார். இப்படி பேசிக் கொண்டிருந்தால் அவரை நாங்கள் தூக்கில் போடுவோம் என்றும் அவர் எச்சரித்தார்.

 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |