| அசாருதீன் தலைவராக பேட்மிண்டன் சங்கம் எதிர்ப்பு | ![]() | ![]() | ![]() |
| கிரிக்கெட் |
| Wednesday, 09 June 2010 10:10 |
விளையாட்டுத் துறையில் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான பிரச்சனைகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ள நிலையில் கிரிக்கெட் சூதாட்ட புகாரில் தடை விதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் இந்திய பேட்மிண்டன் சங்கத்திற்கு தலைவராக மாநில பேட்மிண்டன் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து விளையாட்டிலிருந்து விலகி இருந்த அவர் கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்பியாக உள்ளார். தற்போது அவர் இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் தலைவராவதற்கு விருப்பம் தெரிவித்து பேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் கிரிக்கெட் ஊழலில் குற்றம்சாட்டப்பட்டு தடை விதிக்கப்பட்டுள்ள அசாருதீன் பேட்மிண்டன் சங்கத் தலைவராக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு மாநில பேட்மிண்டன் சங்கங்கள் அசாருதீன் அகில இந்திய பேட்மிண்டன் சங்கத்திற்கு தலைவராக எதிர்ப்பு தெரிவித்து தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளன. இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் தலைவராக தற்போது பி. கே. வர்மா உள்ளார். இவர் தொடர்ந்து 12 ஆண்டுகளாக இந்த சங்கத்தின் தலைவராக இருப்பதால் அவர் தலைவராக நீடிக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே பேட்மிண்டன் சங்கம் தன்னிறைவு பெற்ற அமைப்பாக உள்ளது என்பதால் மத்திய அரசின் உதவிகள் தேவைப்படாது என்றும் எனவே அரசின் விதிமுறைகள் இதற்கு பொருந்த வேண்டியதில்லை என்று சங்க நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வரும் 13ம் தேதி பேட்மிண்டன் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. |
| | எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து | |