Nigazhvugal

Thursday
May 23rd
ஈரான் மீது நான்காவது பொருளாதாரத் தடைPDFPrintE-mail
சர்வதேசம்
Thursday, 10 June 2010 08:49

ஈரான் நாட்டின் மீது நான்காவது முறையாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் பொருளாதார தடை விதித்துள்ளது. அந்த நாடு தனது அணு ஆயுத நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வலியுறுத்தி இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இந்த பொருதார தடை விதிப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 15 உறுப்பினர்களில் 12 உறுப்பினர்கள் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர்.

லெபனான் வாக்கெடப்பில் கலந்து கொள்ளவில்லை. பிரேசில் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.

இதுவரை ஈரான் சந்தித்திராத கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்தார்.

ஆனால் இந்தத் தடை காரணமாக சர்வதேச நாடுகளுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் ரத்து செய்யப்படும் என்று ஈரான் அதிபர் அஹமதினாஜத் தெரிவித்துள்ளார்.

அமைதியான நடவடிக்கைகளுக்காகவே யுரேனியம் செறிவூட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக ஈரான் கூறுகிறது. ஆனால் அணு ஆயுதம் தயாரிக்கவே இந்த நடவடிக்கைகளில் ஈரான் ஈடுபட்டுள்ளது என்று சர்வதேச நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன.

 

 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |