| 3ஜி ஏலம் - அரசுக்கு 1.06 லட்சம் கோடி வருவாய் | ![]() | ![]() | ![]() |
| வணிகம் |
| Friday, 11 June 2010 20:07 |
3ஜி எனப்படும் மூன்றாவது அலைவரிசை ஒதுக்கீட்டிற்கான ஏல நடைமுறைகள் இன்றுடன் முடிந்த நிலையில் இதன் மூலம் அரசுக்கு 1.06 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. 3ஜி ஸ்பெக்ட்ரம் எனப்படும் மூன்றாவது தலைமுறை அலைவரிசை மற்றும் அகண்ட் அலைவரிசை சேவைகளுக்கான ஏலம் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தின் மூலம் அரசுக்கு 35 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மொத்தம் 1.06 லட்சம் கோடி கிடைத்துள்ளது. 3ஜி ஏலத்தில் அரசுக்கு மொத்தம் 67,719 கோடி கிடைத்தது. அகண்ட அலைவரிசை சேவை ஏலத்தில் 38,300 கோடி கிட்டியுள்ளது. இதன் மூலம் அரசுக்கு எதிர்பார்க்கப்பட்டதை விட கூடுதலாக 70 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது.
|
| | எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து | |