Nigazhvugal

Wednesday
May 22nd
பிரபல தந்தைகள் பட்டியலில் ரஜினிக்கு முதலிடம்PDFPrintE-mail
Sunday, 20 June 2010 13:02

பிரபலங்களில் சிறந்த தந்தை யார் என்பது பற்றி நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தமிழ் திரையுலக Bப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதலிடம் பெற்றுள்ளார்.

பாலிவுட் நட்சத்திரங்களிடையே பிரபலமான தந்தை யார் என்ற ஆய்வில் அமிதாப்பச்சன் முதலிடம் பெற்றுள்ளார்.

திருமண தகவல் இணையதளம் ஒன்று சமீபத்தில் திரைப்படத் துறையில் பிரபலமான தந்தை யார் என்று ஆய்வு நடத்தியது. தந்தையர் தினத்திற்காக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சுமார் 85 ஆயிரம் பேர் வாக்களித்தனர்.

இந்த ஆய்வில் 60.6 சதவிகித வாக்குகள் பெற்று அமிதாப்பச்சன் முதலிடம் பெற்றுள்ளார். ரிஷி கபூர், தர்மேந்திரா, அனில்கபூர், ஜிதேந்திரா ஆகியோர் முதல் 5 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளனர்.

தென்னிந்திய நடிகர்களில் ரஜினி 42 சதவிகித வாக்குகள் பெற்று சிறந்த தந்தையாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

Last Updated on Sunday, 20 June 2010 13:12
 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |