| பீகார் இரண்டாம் கட்ட தேர்தல்: ஓட்டுச்சாவடிக்கு தீ வைப்பு | ![]() | ![]() | ![]() |
| தேசியம் |
| Sunday, 24 October 2010 21:54 |
| பீகாரில் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடந்தது. சித்தார்மார்தி மாவட்டத்தில் ஓட்டுச் சாவடியை நக்சலைட்கள் சூறையாடினர். துப்பாக்கி முனையில் அதிகாரிகளை கடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பீகாரின் 234 தொகுதிகளுக்கும் 6 கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட ஓட்டுப்பதிவு 47 தொகுதிகளில் கடந்த 21-ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது. முசாபர்பூர், கிழக்கு சாம்பிராஸ், சித்தாமார்த்தி, தர்ரங்கா, சமஸ்டிபூர் மாவட்டங்களில் 45 தொகுதிகளுக்கு இன்று (24-ம் தேதி) ஓட்டுப்பதிவு நடந்தது. நக்சலைட்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள மினாபூர், ஷாகப்கன்ஜ் தொகுதிகளில் மதியம் 3 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிந்தது. கிழக்கு சம்பரன், ஷோகர், சிடாமர்கி உள்பட சில இடங்களில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்ட்கள் நோட்டீஸ் ஒட்டியிருந்தனர். சித்தார்மார்தி மாவட்டத்தில் உள்ள ஒரு ஓட்டுச்சாவடியில் நக்சல்கள் திடீரென துப்பாக்கியுடன் புகுந்தனர். ஓட்டு மெஷின்களை அடித்து நொறுக்கினர். அங்கிருந்து பொருட்களுக்கு தீவைத்து கொளுத்தினர். அங்கு பணியில் இருந்த 3 தேர்தல் அலுவலர்களை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். இதையடுத்து, மற்ற இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ஓட்டுப்பதிவு நடந்தது. மொத்தம் 52 சதவீத ஓட்டுக்கள் பதிவானதாக அதிகாரிகள் கூறினர். |
| | எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து | |