| மேற்குவங்கத்தில் படகு விபத்து: 19 உடல்கள் மீட்பு | ![]() | ![]() | ![]() |
| தேசியம் |
| Sunday, 31 October 2010 19:04 |
| மேற்குவங்கத்தில் ஹூக்ளி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்திருக்கிறது. பலரை காணாததால் மீட்பு பணி தொடர்ந்து நடக்கிறது. மேற்குவங்க மாநிலம் தெற்கு பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள காகதீப் என்ற இடத்துக்கு ஹிஜ்லி ஷரிப் என்ற இடத்தில் இருந்து படகில் சிலர் நேற்று சென்றனர். ஹூக்ளி ஆறு வங்கக்கடலில் சங்கமிக்கும் இடத்தின்அருகே தல்பட்டி தீவுப்பகுதியின் அருகே செல்லும்போது படகு திடீரென பாரம் தாங்காமல் நிலைதடுமாறி கவிழ்ந்தது. 18 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்தன. இன்று (31ம் தேதி) ஒரு உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்திருக்கிறது. 50 பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அதில் 23 பேர் சிகிச்சைக்கு பிறகு வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். மேற்குவங்க மாநில மீட்பு பணித்துறை, கடலோர பாதுகாப்பு படையினர் இணைந்து ஹெலிகாப்டர், ஹோவர்கிராப்ட் உள்ளிட்ட வாகனங்களில் தொடர்ந்து உடல்களை தேடி வருகின்றனர். |
| | எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து | |