Nigazhvugal

Sunday
May 19th
சபாஷ் ஹர்பஜன் சிங்PDFPrintE-mail
கிரிக்கெட்
Monday, 08 November 2010 16:56

சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் தனது அதிரடியான முதலாவது டெஸ்ட் சதத்தை அடித்ததுடன் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரா ஆவதற்கு பேருதவி புரிந்திருக்கிறார்.

அகமதாபாத் டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் 487 ரன்கள் குவித்த இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 65 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்களை இழந்து பரிதாபமான நிலைக்கு சென்றது.

டிரா ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட போட்டியில் இந்தியா தோல்வியை சந்திக்க நேரிடுமோ என்ற கவலை மேலோங்கிய நிலையில் கூட்டணி சேர்ந்த லட்சுமண் மற்றும் ஹர்பஜன் ஆகியோர் 7வது விக்கெட்டுக்கு கூட்டாக 163 ரன்களை குவித்தனர்.

லட்சுமணி 91 ரன்களுக்கு ஆட்டமிழக்க ஹர்பஜன் 115 ரன்கள் குவித்து தனது முதலாவது சதத்தை பூர்த்தி செய்தார். இதனால் இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 266 ரன்கள் எடுக்க முடிந்தது.

தொடர்ந்து ஆடத்தொடங்கிய நியூசிலாந்து ஒரு விக்கெட் இழப்புக்கு 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டி டிரா ஆனது.

இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக ஹர்பஜன் அறிவிக்கப்பட்டார். அவர் முதல் இன்னிங்சிலும் சிறப்பாக ஆடி 69 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |