| தேசியம் |
|
Wednesday, 10 November 2010 22:01 |
சபரிமலை ஐயப்பன் சிலையை தொட்டது தொடர்பான வழக்கில் கன்னட நடிகை ஜெயமாலா மீது கேரள போலீசார் வரும் 15-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் நுழையக்கூடாது என்பது விதிமுறை. 18 வயதில் கோயிலுக்குள் சென்றதாகவும் ஐயப்பன் சிலையை தொட்டு வணங்கியதாகவும் கன்னட நடிகை ஜெயமாலா 4 ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கேரள குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர்.
கோயில் தேவஸ்தானம் அளித்த புகார் அடிப்படையில் ஜெயமாலா மீது வழக்கு தொடரப்பட்டது. அவர் மீது குற்றப்பத்திரிகை வரும் 15-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. |