Nigazhvugal

Wednesday
Jun 19th
இந்தோனேசியா எரிமலை: 240 பேர் பலிPDFPrintE-mail
சர்வதேசம்
Saturday, 13 November 2010 18:12

இந்தோனேசியாவில் மெராபி எரிமலை சீற்றத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்திருக்கிறது.

இந்தோனேசியாவின் யோக்யகர்த்தா நகருக்கு அருகே உள்ள மெராபி எரிமலையில் இருந்து கடந்த 20 நாட்களாக தூசியும் சாம்பலும் வெளியேறி வருகிறது. அவ்வப்போது நெருப்புக் குழம்பும் வெளியாகிறது. இதையடுத்து, எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் சுமார் 4 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

எரிமலையில் இருந்து வெளியேறும் சாம்பல் பல கி.மீ. தூரத்துக்கு பரவிவருகிறது. இதன் காரணமாக வீடுகள் தீப்பிடித்து ஏராளமானோர் பலியாகிவிட்டார்கள். பலி எண்ணிக்கை 240&யை தாண்டிவிட்டதாக தெரிகிறது. தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று இந்தோனேசிய மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |