Nigazhvugal

Thursday
May 23rd
இணையதளத்தில் அமைச்சர்களின் சொத்து விவரங்கள்PDFPrintE-mail
தேசியம்
Sunday, 14 November 2010 21:51

மத்திய அமைச்சர்களின் சொத்து விவரங்கள் அனைத்தும் ஓரிரு மாதத்தில் பிரதமரின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.

பல்வேறு அமைச்சர்களும் தொடர்ந்து லஞ்சம், ஊழல், முறைகேடு புகார்களில் சிக்கி வருவதைத் தொடர்ந்து, அமைச்சரவை சகாக்கள் அனைவரும் உண்மையான சொத்து விவரங்களை பிரதமர் அலுவலத்துக்கு அனுப்பி வைக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். பெறப்படும் இத்தகவல்கள் விரைவில் பிரதமர் அலுவலக இணையதளத்தில் விரைவில் வெளியிடப்பட உள்ளன. இதற்கான உத்தரவை அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் அமைச்சக செயலர் சந்திரசேகரன் சுற்றிக்கை மூலம் அனுப்பியுள்ளார்.

அமைச்சர்களின் தொழில், குடும்பத்தினர் பெயரில் உள்ள சொத்து விவரங்களும் கேட்கப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் இன்னும் ஓரிரு மாதத்தில் இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. வருடத்துக்கு ஒருமுறை புதிய தகவல்கள் பெறப்பட்டு இணையதளத்தில் சேர்க்கப்படும்.

 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |