Nigazhvugal

Tuesday
May 21st
பேஸ்புக் சிஇஓ மீது 1 பில்லியன் டாலர் கேட்டு வழக்குPDFPrintE-mail
வணிகம்
Saturday, 02 April 2011 13:28

சமூக இணையதளமான பேஸ்புக் தலைமைச் செயல் அதிகாரி மார்க் சுக்கர்பெர்க் ஒரு பில்லியன் டாலர் நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் என்று கோரி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு எதிராக பேஸ்புக் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு பக்கம் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தேர்ட் இன்டிஃபாடா என்ற அந்தப் பக்கத்திற்கு சுமார் 5 லட்சம் பார்வையாளர்கள் உள்ளனர். இந்தப் பக்கத்தை பேஸ்புக் நீக்கவிட்டது. இருந்த போதிலும், இது மிகவும் தாமதமான நடவடிக்கை என்று அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வாழும் யூத இனத்தவர் ஒருவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை சந்திக்கத் தயாராக இருப்பதாக பேஸ்புக் கூறியுள்ளது.

 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |