| தோனி இந்தியாவின் அதிருஷ்டம் - அஃப்ரிடி | ![]() | ![]() | ![]() |
| கிரிக்கெட் |
| Thursday, 07 April 2011 13:12 |
தோனி போன்ற திறமையான கேப்டன் இருப்பது இந்திய அணிக்கு கிடைத்த அதிருஷ்டம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி கூறியுள்ளார். இந்திய அணி பற்றி கடந்த சில தினங்களுக்கு முன் மோசமாக விமர்சித்திருந்த அஃப்ரிடி, தற்போது அதை மாற்றிக் கொள்ளும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியை தோனி சிறப்பாக வழிநடத்திச் சென்றார். அவர் இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடி அணிக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்துள்ளார் என்று அஃப்ரிடி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை மீண்டும் ஆசிய கண்டத்திற்கு திரும்பியிருப்பது தமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். எங்கள் அணியை வெல்லும் எந்தவொரு அணிக்கும் உலகக் கோப்பையை வெல்லும் தகுதி உள்ளது என்றும் அவர் கூறினார். இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் பற்றி கருத்து தெரிவித்த அவர், ரன் குவிக்க வேண்டும் என்ற வெறி அவரிடம் இந்த வயதிலும் உள்ளது என்றும், அவர் இந்திய அணிக்கு இன்னும் அதிக அளவில் சாதனைகளை பெற்றுத் தருவார் என்றும் அஃப்ரிடி கூறினார். |
| | எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து | |