| ஆப்கன் போலீஸ் தலைமையகத்தில் தாக்குதல் - 6 பேர் பலி | ![]() | ![]() | ![]() |
| சர்வதேசம் |
| Thursday, 07 April 2011 17:40 |
ஆப்கனிஸ்தானில் உள்ள அந்நாட்டு காவல்துறை தலைமையகத்தில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் எத்தனை பேர் ஈடுபட்டனர் என்பது தெரியவில்லை. எனினும் அங்கு ஒருங்கிணைந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கப் படைகளின் ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. கடநி;த சில தினங்களாக ஆப்கனிஸ்தானில் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அண்டை நாடான பாகிஸ்தானிலிருந்து ஏராளமான பயங்கரவாதிகள் அங்கு ஊடுருவி தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் ஈடுபட்டதாகவும் 3 பேர் தங்கள் உடலில் பொருத்தப்பட்டிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததாகவும் ஒரு பயங்கரவாதி துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டதாகவும் உயரதிகாரி ஒருவர் கூறினார். |
| | எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து | |