| பங்குச் சந்தை - ஐடி நிறுவன பங்குகள் சரிவு | ![]() | ![]() | ![]() |
| வணிகம் |
| Friday, 08 April 2011 17:59 |
மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் இன்று சென்செக்ஸ் 140 புள்ளிகளும் நிப்டி 43 புள்ளிகளும் சரிந்தன. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வலிமையாக இருப்பதால் ஐடி நிறுவன பங்குகளின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தன. டிசிஎஸ் பங்குகள் விலை 4.50 ரூபாயும், இன்போசிஸ் பங்குகள் விலை 20.50 ரூபாயும், விப்ரோ பங்குகள் விலை 6.30 ரூபாயும் சரிந்தன. இது தவிர ரியாலிட்டி, ஆட்டோமொபைல், நுகர்வோர் பொருட்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் பங்கு விலைகளும் சரிவை சந்தித்தன. லாபத்தை பதிவு செய்து கொள்ளும் முதலீட்டாளர்களின் போக்கு காரணமாக இன்று பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி காணப்பட்டதாக பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன. |
| | எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து | |