Nigazhvugal

Tuesday
May 21st
ஐபிஎல் போட்டிகள் - சூதாடிகள் தயார்PDFPrintE-mail
கிரிக்கெட்
Friday, 08 April 2011 18:20

கிரிக்கெட் போட்டிகளுக்கு அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் தயாராகிறார்களோ இல்லையோ, சூதாடிகள் தயாராகிவிடுகின்றனர்.

இன்று தொடங்கி நடைபெறும் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்று பந்தயம் கட்டும் சூதாடிகள் தீவிரமாக தங்கள் பணிகளை தொடங்கிவிட்டனர்.

இதுவரை இந்தப் போட்டிகளுக்காக 12 ஆயிரம் கோடி ரூபாய் பந்தயம் கட்டப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் போது நடத்தப்பட்ட பந்தயத்தில் சூதாடிகளுக்கு நல்ல வருமானம் கிடைத்ததால் அவர்கள் ஐபிஎல் போட்டிகளில் இன்னும் தீவிரத்துடன் இறங்கியுள்ளனர்.

இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்திற்காக கட்டப்பட்ட பந்தயத் தொகை ஏப்ரல் முதல் தேதியன்று 50 ஆயிரம் கோடியாக இருந்ததாம். ஆனால் போட்டி நடைபெற்ற அடுத்த நாளான ஏப்ரல் 2ம் தேதி அது 52,000 கோடியாக உயர்ந்துவிட்டதாம்.

 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |