Nigazhvugal

Thursday
May 23rd
சென்செக்ஸ் 480 புள்ளிகள் உயர்வுPDFPrintE-mail
வணிகம்
Friday, 07 October 2011 10:09

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் 481 புள்ளிகள் உயர்ந்து மீண்டும் 16 புள்ளிகளைக் கடந்தது.

ஆசிய பங்குச் சந்தைகளில் காணப்படும் ஏற்றம் மற்றும் குறைந்த விலையில் பங்குகள் கிடைப்பதால் வர்த்தகர்கள் அதிக அளவில் வாங்க முன்வந்ததால் இந்த உயர்வு காணப்படுகிறது.

கடந்த 4 வர்த்தக நாட்களில் 905 புள்ளிகளை இழந்திருந்த சென்செக்ஸ் இன்று ஒரே நாளில் 481 புள்ளிகள் அதிகரித்தது. அனைத்து பங்குகளும் ஏறுமுகமாகவே காணப்படுகிறது. அன்னிய நிதி நிறுவனங்களும் பங்குகளை வாங்கி வருகின்றன.

இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் நிஃப்டி குறியீடு 145 புள்ளிகள் உயர்ந்து 4896 புள்ளிகளானது.

அமெரிக்கப் பங்குச் சந்தையில் நேற்று காணப்பட்ட ஏற்றம் காரணமாக ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்றம் காணப்படுவதாகவும் அதனால் இந்திய பங்குச் சந்தைகளும் ஏற்றத்துடன் இருப்பதாகவும் பங்குத் தரகர்கள் கருத்து தெரிவித்தனர்.

 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |