| பயங்கரவாதிகளுடன் பாக் தொடர்பு - ஒபாமா கவலை | ![]() | ![]() | ![]() |
| சர்வதேசம் |
| Friday, 07 October 2011 10:12 |
பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் உளவு அமைப்பு பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பது கவலை அளிப்பதாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். இந்தியாவுடனான அமைதியான அணுகுமுறை அனைவருக்கும் நன்மை அளிக்கக்கூடியது என்பதை பாகிஸ்தான் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் ஒபாமா தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஹக்கானி குழுவுடன் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தொடர்பு வைத்திருப்பதை நேரடியாக குறிப்பிடாமல், பயங்கரவாதிகள் ஆபத்தானவர்கள் என்றார். சில தனிநபர்களுடன் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவு அமைப்பு ஐஎஸ்ஐ தொடர்பு வைத்திருப்பதில் சந்தேகம் இல்லை என்றும், இது கவலை அளிப்பதாக உள்ளது என்றும் ஒபாமா தெரிவித்தார். சுதந்திரமான ஆப்கனிஸ்தான் ஏற்பட்டால் அது இந்தியாவுடன் கைகோர்த்துக் கொள்ளும் என்றும் எனவே அது தங்களுக்கு ஆபத்தானது என்றும் பாகிஸ்தான் கருதுவதாக தெரிவித்த அவர், இந்தியாவை பாகிஸ்தான் எதிரியாகவே கருதுகிறது என்றும் இது தேவையற்ற பயம் என்றும் கூறினார். |
| | எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து | |