| இன்ஃபோசிஸ் லாபம் 9.,72 சதவிகிதம் உயர்வு | ![]() | ![]() | ![]() |
| வணிகம் |
| Wednesday, 12 October 2011 11:24 |
முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு லாபம் 9.72 சதவிகிதம் உயர்ந்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 3,0 2011 அன்று முடிந்த இரண்டாவது காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனம் 1737 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 9.72 சதவிகிதம் கூடுதலாகும் என்று அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷிபுலால் தெரிவித்தார். இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வர்த்தகம் முந்தைய ஆண்டில் இருந்த 6947 கோடியிலிருந்து 16 சதவிகிதம் உயர்ந்து 8099 கோடியாக உள்ளது என்றும் அவர் கூறினார். உலகப் பொருளதார நிலை இன்னமும் கவலை அளிப்பதாகவே உள்ளது என்றும், இது தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஆபத்தானது என்றும் ஷிபுலால் தெரிவித்தார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் லாபம் 9.72 சதவிகிதம் உயர்ந்திருப்பதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து இந்தியப் பங்குச் சந்தைகளில் அந்த நிறுவனப் பங்குகள் விலை 5 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவில் உள்ள போதிலும் இந்தியப் பங்குச் சந்தைகள் உயர்வுடன் காணப்படுகிறது. |
| | எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து | |