Nigazhvugal

Tuesday
May 21st
உள்ளாட்சித் தேர்தலில் 61 சதவிகித வாக்குப்பதிவுPDFPrintE-mail
செய்திகள் - தமிழகம்
Monday, 17 October 2011 18:50

தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 61 சதவிகித வாக்குகள் பதிவானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி முதல் கட்டமாக இன்று மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. காலையில் வாக்குப்பதிவு மந்தமாக தொடங்கிய போதிலும் பின்னர் விறுவிறுப்படைந்தது. மதியத்திற்கு மேல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பது போன்ற புகார்கள் அதிக அளவில் இருந்தது. என்றாலும் வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் இன்றி அமைதியாக நடைபெற்றது.

இந்த தேர்தலில் ஆளும் கட்சி அதிகாரிகளின் உதவியுடன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக திமுக, காங்கிரஸ், பாமக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |