Nigazhvugal

Wednesday
May 22nd
கலாவதி குடும்பத்தில் தொடரும் தற்கொலைPDFPrintE-mail
தேசியம்
Tuesday, 18 October 2011 10:19

மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியை சேர்ந்த கலாவதியை நினைவிருக்கிறதா? ஏழ்மையில் வாடி வதங்கும் இந்நாட்டின் பெரும்பாலான விவசாயக் குடும்பத்தை சேர்ந்த பெண்மணி போல்தான் அவரும் சோகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்.

கடந்த 2008ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது உரையாற்றிய ராகுல் காந்தி அவரது பெயரை நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட பிறகு கலாவதி நாடறிந்த பிரபலமானார்.

கடன் பிடியில் தற்கொலை செய்து கொண்ட கணவனை இழந்து வாழ்ந்து கொண்டிருந்த அவருக்கு ஏராளமான இடங்களில் இருந்து உதவிக்கரங்கள் நீண்டன.

மகசேசே விருது பெற்ற பிந்தே்ஷவர் பாதக் அவருக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார். அந்த தொகை வங்கியில் முதலீடு செய்யப்பட்டு மாதந்தோறும் கலாவதி குடும்பத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் வட்டிப்பணம் கிடைத்தது.

பணம் கிடைத்துவிட்டால் மட்டும் எல்லாம் கிடைத்துவிடுமா என்ன? கலாவதி குடும்பத்திற்கு அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்து கொண்டு தான் இருந்தது.

கடந்த ஒரு மாததத்திற்கு முன்பு கலாவதியின் மகள் சவிதா திவாகர் தற்கொலை செய்து கொண்டார். உடல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பெற வசதியின்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சவிதா கடந்த செப்டம்பர் மாதம் 26ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் கலாவதியின் மகள் என்பது இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த ஆண்டுதான் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த கலாவதியின் மருமகன் சஞ்சய் கலாஸ்கார், கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |