| ஜெயலலிதா மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் | ![]() | ![]() | ![]() |
| செய்திகள் - தமிழகம் |
| Wednesday, 19 October 2011 19:19 |
அஇஅதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூர் நீதிமன்றம் ஒன்றில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு நடைபெற்று வருகிறது. இதில் ஆஜராக விலக்கு கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி இந்த வழக்கு விசாரணையில் தாம் ஆஜராவதை நவம்பர் மாத இறுதிவரையில் தள்ளிவைக்க உத்தரவிடக் கோரி நேற்று ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் அதை தள்ளுபடி செய்தனர். கர்நாடகத்தில் ஜெயலலிதாவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று கர்நாடக தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை தலைவர் ஆகியோர் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. |
| | எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து | |