Nigazhvugal

Tuesday
May 21st
ஐநா பதவி - பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவுPDFPrintE-mail
சர்வதேசம்
Wednesday, 19 October 2011 19:21

இந்தி - சீனி பாய் பாய் என்று நேரு காலத்திலிருந்து கூறிக் கொண்டு சீனாவுக்கு ஆதரவாக இந்தியா நடந்து கொள்கின்ற போதிலும், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் பதவிக்கு இந்தியாவுக்கு பதிலாக பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கவே சீனா முன்வந்துள்ளது.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராக இந்தியா உள்ளது. கடந்த ஆண்டு இந்த நியமனத்தை சீனா வரவேற்ற போதிலும், இந்தியா நிரந்தர உறுப்பினராவது தொடர்பாக இதுவரை சீனா கருத்து எதுவும் தெரிவிக்காமல் உள்ளது. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் சீனா மட்டுமே இந்தியா நிரந்தர உறுப்பினராவது பற்றி மௌனம் சாதிக்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராக ஆதரவு தெரிவிக்கப்படும் என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் கோரிக்கைக்கு சீனா முக்கியத்துவம் அளிக்கிறது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பில் பாகிஸ்தான் முக்கியப் பங்காற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஐநா பொதுக்குழு கூட்டத்தில் பாகிஸ்தான் தனது விருப்பத்தை தெரிவித்திருந்தது. சீனா தூண்டிவிட்டே பாகிஸ்தான் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாக அப்போதே பார்வையாளர்கள் பலர் சந்தேகம் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |